Search This Blog

Sunday, January 24, 2010

ஹெல்மட் - எமனின் நவீன பாச கயிறு

இடப்புறத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தை ஒட்டி வரும் ஒருவர் பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் ஒரு திருப்பத்தில் திரும்பும் போது இதனை சற்றும் எதிர்பாரத பின்னவர் முன்னவரின் மீது மோதி இருவரும் விழுந்து விடுகிறார்கள். இச் சம்பவத்தை நேரில் கண்ணுற்ற காவல் துறை நண்பர் உடனே ஓடி வந்தார். இதனிடையே அவ்விருவருக்கும் எவ்வித காயம் ஏற்படவில்லை. அப்போது காவல் துறை நண்பர் கூறினார் "ஹெல்மட் தலைக்கு இருவரும் அணிந்ததால் காயம் ஏற்படவில்லை" என்றார். அருகிலிருந்தவர் "ஹெல்மட் அணிந்ததால் தான் இவ் விபத்து நடந்தது என்றார். அதுவே உண்மை . ஏன் என்றால் நமது விழி ஓரத்தில் தெரியும் பிம்பம் நமக்கு பின்னால் உள்ள காட்சிகளை உணர முடியும். ஆனால்... ஹெல்மட் அணிவதால் நமது முகத்திற்கு முன்னால் உள்ள காட்சிகளை மட்டும் காணும் பொது பின்னால் உள்ள காட்சிகளை பார்க்க முடியாது. பின்னால் வருவபவைகளை காண்பதற்க்கு வசதியாக இரு சக்கர வாகனத்தின் இரு புறமும் கண்ணாடி பொருத்தி இருந்தால் அதனை பார்த்து விபத்து நேரா வண்ணம் பயணிக்கலாம். அரசாங்கம் அறிவித்த ஹெல்மட் சட்டம் சரியே ஆனால்... விபத்துகளுக்கு மூல காரணிகள் எவை எவை என்று ஆராய்ந்து பார்த்து சட்டமிடலாம்.இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் எப்படி ஹெல்மட் அணிய வேண்டுமோ அதே போல் இரு சக்கர வாகனத்தின் இரு புறமும் கண்ணாடி பொறுத்த வேண்டும் என்று சட்டமிடலாம். அப்போதுதான் விபத்தின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
வள்ளுவன் கூற்று படி
"ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்ல தவர்க்கு"

அல்லது இனி வரும் நாட்களில்
எமனின் நவீன பாச கயிறாக ஹெல்மட் மாறிவிடும்.

நிழல் படம்


இதற்கு பெயர்தான் நிழல் படம்...