Search This Blog

Tuesday, November 16, 2010

நாகரிகமான ஆட்டு மந்தைகள்...


அந்த காலத்தில் நாங்கள் எல்லாம் என்று வயது முதிர்ந்தவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே குதிகால் பிடரியில் அடிக்க ஓடி ஒளிவோம். ஆனால் தற்போது அந்த காலம் என்று நீட்டி முழங்காமல் தற்காலத்தில் ஒரு 4 வருடங்களுக்கு முன்பு நாம் அனைவரும் நமது சமுதாயத்தில் எந்த ஒரு உரையாடலின் போதும்,  ஆண் என்றால் ஒன்று அண்ணா அல்லது சார் என்றோ பெண்களிடம் பேசும் போது அம்மா, அக்கா அல்லது மேடம் என்றோ அழைப்பது வழக்கம், இதே 4 வருடங்களுக்கு முன்போ அல்லது தற்போதும் கல்லூரிகளின் வழக்கு மொழியாக பெண் ஆசிரியரை பார்த்து, சிலர் ஆங்கிலம் மட்டும் எனது தாய் மொழி என்று மத்தவர்கள் தன்னை நினைக்க வேண்டும் என்று மாடு கூட சாணம் இட மறுக்கும்  மேட்டங்க்காட்டில் இருந்தும் நகர வாழ்கை எனும் சந்து இடுக்கில் வசிக்கும் சில மாணவச் செல்வங்கள், நவ நாகரிகம் என்று  தனக்கு  தானே சொல்லிக்கொண்டு மேடத்தை மேம் என்றும், மாம் என்றும்  அழைக்கும் விசித்திரத்தை கண்டும் கேட்டும் இருந்தன தமிழ் கூறும் இந் நல் உலகு, ஆனால் இதையும் நவ நாகரிகமாக மாற்றித்தான் தீருவேன் என்று நகரத்தில் உள்ள சில அங்காடிகளில் பணி புரியும் யுவதியும், யுவராசக்களும் ம்...மேம் என்று கூறி அழைகின்றர்கள், ஆங்கிலேயர்களுக்கு நல்ல காலம் போல் நம் நாட்டை விட்டு 1947 ம் ஆண்டே வெளிறியது  இல்லை என்றால் இன்று சனல் கயறு திரிக்க கேரளாவில் தென்னை மரங்கள் இல்லாமல் போயிருக்கும் ஏன்னென்றால் அனைத்து ஆங்கிலேயர்களும் தூக்கில் தொங்கிட சனல் கயறு தீர்ந்து போயிருக்கும். இனி வரும் காலத்தில் குழந்தைகளுக்கு ஆடு எவ்வாறு கத்தும்  என்று சொல்லி தர வேண்டாம் இந்த யுவதியும், யுவராசக்களும் பெண்ணினத்தை அழைக்கும் சொல்லான  ம்...மேம் என்பதை அருகில் இருந்து காண்பித்தால் போதும்.... 
அகர முதல எனும் குறள் கூறிய வள்ளுவரின்  இந்த குறளையும் சற்றே கேளுங்கள்
"பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்  
மருளானாம் மாணாப் பிறப்பு"

No comments: