Search This Blog

Wednesday, May 4, 2011

காரை பார்க் பண்ணுவது எப்படி...?

காரை பார்க் பண்ணுவது எப்படி...?


இப்படியா.....

04/05/2011 காலை 4  மணியளவில் கோவை பீளமேடு அருகே நடந்த விபத்து நடந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படம்.....

Thursday, April 28, 2011

எலெக்ஷன் ரிசல்ட் மே 3 ம் தேதி சற்று முன் அறிவிப்பு....




கடந்த மாதம்  நடை பெற்ற தேர்தலின் முடிவுகள் மே மாதம் 3 ம் தேதி வெளிடப்படும் என்று சற்று முன் அறிவித்தனர் பாரதி குடியிருப்போர்  வாழ் நல சங்கத்தின் நிர்வாகிகள்.
மேலும் அவர்கள்  கூறியதாவது...  கடந்த மாதம்  நடை பெற்ற நிர்வாகிகள் தேர்தலின் முடிவுகள் வருகிற மே மாதம் 3 ம் தேதி வெளிடப்படும் பாரதி நகர் வாழ் மக்கள்கள் பலர்  கோடை விடுமுறைக்காக வெளயூர் செல்வதானால் தேர்தல் ரிசல்ட் வருகிற மே மாதம் 3 ம் தேதி வெளிடப்படும். என்று கூறினார்...

எப்ப்பப்புடி...

Wednesday, April 27, 2011

நவீன இளைஞர்கள்

சாராய கடையை வட்டமிடும்

               வீட்டில் பூச்சிகள்... 

Tuesday, April 26, 2011

புதிய நட்பு...

ஓராயிரம் நாட்கள்
பேச நினைத்ததை
ஒரு நாளில்
பேசி முடித்திட முடியுமா.... 

Wednesday, November 17, 2010

பொங்கலான்று சுட்டி டிவியில் எந்திரன்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த சமிபத்திய திரைபடத்தை கடந்த வாரம் பார்க்க நேர்ந்தது அதில் நடித்த ஹீரோ ஒரு அமனுஷயமான ஹீரோ வாக  மாரி சில வித்தைகளை  செய்து ரசிகர்களை ஒரு சிரிப்பு கடலில் மூழ்கடித்தார். சுமார் 900 நபர்களுக்கு நடுவே அமர்ந்து சுட்டி டிவி பார்த்தது போல் ஒரு மிக சிறந்த அனுபவத்தை வழங்கிய இயக்குனருக்கு நன்றி. அத் திரைபடத்தை தயாரித்தவர்கள்  இனி வரும் பொங்கல் திரு நாளில் அவர்களின் சேனலான  சுட்டி 
டிவியில், உலகத்தில்  குழந்தைகளுக்கான தொடங்கப்பட்ட சேனல்களின் வரலாற்றில் முதன் முறையாக குழந்தைகளுக்கான முழு நீள திரைப்படம்  என்று விளம்பரப்படுத்தி ஒளிபரப்புவார்கள்.




Tuesday, November 16, 2010

நாகரிகமான ஆட்டு மந்தைகள்...


அந்த காலத்தில் நாங்கள் எல்லாம் என்று வயது முதிர்ந்தவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே குதிகால் பிடரியில் அடிக்க ஓடி ஒளிவோம். ஆனால் தற்போது அந்த காலம் என்று நீட்டி முழங்காமல் தற்காலத்தில் ஒரு 4 வருடங்களுக்கு முன்பு நாம் அனைவரும் நமது சமுதாயத்தில் எந்த ஒரு உரையாடலின் போதும்,  ஆண் என்றால் ஒன்று அண்ணா அல்லது சார் என்றோ பெண்களிடம் பேசும் போது அம்மா, அக்கா அல்லது மேடம் என்றோ அழைப்பது வழக்கம், இதே 4 வருடங்களுக்கு முன்போ அல்லது தற்போதும் கல்லூரிகளின் வழக்கு மொழியாக பெண் ஆசிரியரை பார்த்து, சிலர் ஆங்கிலம் மட்டும் எனது தாய் மொழி என்று மத்தவர்கள் தன்னை நினைக்க வேண்டும் என்று மாடு கூட சாணம் இட மறுக்கும்  மேட்டங்க்காட்டில் இருந்தும் நகர வாழ்கை எனும் சந்து இடுக்கில் வசிக்கும் சில மாணவச் செல்வங்கள், நவ நாகரிகம் என்று  தனக்கு  தானே சொல்லிக்கொண்டு மேடத்தை மேம் என்றும், மாம் என்றும்  அழைக்கும் விசித்திரத்தை கண்டும் கேட்டும் இருந்தன தமிழ் கூறும் இந் நல் உலகு, ஆனால் இதையும் நவ நாகரிகமாக மாற்றித்தான் தீருவேன் என்று நகரத்தில் உள்ள சில அங்காடிகளில் பணி புரியும் யுவதியும், யுவராசக்களும் ம்...மேம் என்று கூறி அழைகின்றர்கள், ஆங்கிலேயர்களுக்கு நல்ல காலம் போல் நம் நாட்டை விட்டு 1947 ம் ஆண்டே வெளிறியது  இல்லை என்றால் இன்று சனல் கயறு திரிக்க கேரளாவில் தென்னை மரங்கள் இல்லாமல் போயிருக்கும் ஏன்னென்றால் அனைத்து ஆங்கிலேயர்களும் தூக்கில் தொங்கிட சனல் கயறு தீர்ந்து போயிருக்கும். இனி வரும் காலத்தில் குழந்தைகளுக்கு ஆடு எவ்வாறு கத்தும்  என்று சொல்லி தர வேண்டாம் இந்த யுவதியும், யுவராசக்களும் பெண்ணினத்தை அழைக்கும் சொல்லான  ம்...மேம் என்பதை அருகில் இருந்து காண்பித்தால் போதும்.... 
அகர முதல எனும் குறள் கூறிய வள்ளுவரின்  இந்த குறளையும் சற்றே கேளுங்கள்
"பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்  
மருளானாம் மாணாப் பிறப்பு"

Monday, November 15, 2010

காதலி தங்கையாக மாறியது....

கங்கா முதல் மகாராஜா மல்டிப்ளெக்ஸ் வரையும்
வ ஊ சி முதல் மருதமலை வரையும்
சென்று திரிந்து  தின்று வந்த போது இல்லாத பாசம்
நான் அவளிடம்   காதலிக்கிறேன் என்று கூறியபோது
உங்களை  என் அண்ணன் போல நினைத்தேன்
என்று பாசம் பொங்க கூறிய போதுதான் தெரிந்தது
எனது பர்ஸ் காலி