Sunday, July 24, 2011
Tuesday, July 12, 2011
கோவையில் நடுரோட்டில் பொதுமக்களின் முன்னிலையில் கொலை...! வீடியோ காட்சி
கோவையில் நடுரோட்டில் பொதுமக்களின் முன்னிலையில் 10 /07/2011 அன்று சந்தோஷ் குமார் என்ற வாலிபரை நான்கு நண்பர்கள் மது போதையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டதை அங்குள்ள போக்குவரத்து சிக்னலில் பொருத்தபட்டுள்ள காமிராவில் பதிவகியுள்ளது
கொலை செய்யப்பட்ட வாலிபர் சந்தோஷ் குமார்
சந்தோஷ் குமாரை கொன்ற நான்கு நபர்கள்
கொலை செய்யப்பட்ட சந்தோஷ் குமாரின் மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை
Sunday, July 3, 2011
Wednesday, May 4, 2011
Thursday, April 28, 2011
எலெக்ஷன் ரிசல்ட் மே 3 ம் தேதி சற்று முன் அறிவிப்பு....
கடந்த மாதம் நடை பெற்ற தேர்தலின் முடிவுகள் மே மாதம் 3 ம் தேதி வெளிடப்படும் என்று சற்று முன் அறிவித்தனர் பாரதி குடியிருப்போர் வாழ் நல சங்கத்தின் நிர்வாகிகள்.
மேலும் அவர்கள் கூறியதாவது... கடந்த மாதம் நடை பெற்ற நிர்வாகிகள் தேர்தலின் முடிவுகள் வருகிற மே மாதம் 3 ம் தேதி வெளிடப்படும் பாரதி நகர் வாழ் மக்கள்கள் பலர் கோடை விடுமுறைக்காக வெளயூர் செல்வதானால் தேர்தல் ரிசல்ட் வருகிற மே மாதம் 3 ம் தேதி வெளிடப்படும். என்று கூறினார்...
எப்ப்பப்புடி...
Wednesday, April 27, 2011
Tuesday, April 26, 2011
Wednesday, November 17, 2010
பொங்கலான்று சுட்டி டிவியில் எந்திரன்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த சமிபத்திய திரைபடத்தை கடந்த வாரம் பார்க்க நேர்ந்தது அதில் நடித்த ஹீரோ ஒரு அமனுஷயமான ஹீரோ வாக மாரி சில வித்தைகளை செய்து ரசிகர்களை ஒரு சிரிப்பு கடலில் மூழ்கடித்தார். சுமார் 900 நபர்களுக்கு நடுவே அமர்ந்து சுட்டி டிவி பார்த்தது போல் ஒரு மிக சிறந்த அனுபவத்தை வழங்கிய இயக்குனருக்கு நன்றி. அத் திரைபடத்தை தயாரித்தவர்கள் இனி வரும் பொங்கல் திரு நாளில் அவர்களின் சேனலான சுட்டி டிவியில், உலகத்தில் குழந்தைகளுக்கான தொடங்கப்பட்ட சேனல்களின் வரலாற்றில் முதன் முறையாக குழந்தைகளுக்கான முழு நீள திரைப்படம் என்று விளம்பரப்படுத்தி ஒளிபரப்புவார்கள்.
Tuesday, November 16, 2010
நாகரிகமான ஆட்டு மந்தைகள்...
![]() |
அந்த காலத்தில் நாங்கள் எல்லாம் என்று வயது முதிர்ந்தவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே குதிகால் பிடரியில் அடிக்க ஓடி ஒளிவோம். ஆனால் தற்போது அந்த காலம் என்று நீட்டி முழங்காமல் தற்காலத்தில் ஒரு 4 வருடங்களுக்கு முன்பு நாம் அனைவரும் நமது சமுதாயத்தில் எந்த ஒரு உரையாடலின் போதும், ஆண் என்றால் ஒன்று அண்ணா அல்லது சார் என்றோ பெண்களிடம் பேசும் போது அம்மா, அக்கா அல்லது மேடம் என்றோ அழைப்பது வழக்கம், இதே 4 வருடங்களுக்கு முன்போ அல்லது தற்போதும் கல்லூரிகளின் வழக்கு மொழியாக பெண் ஆசிரியரை பார்த்து, சிலர் ஆங்கிலம் மட்டும் எனது தாய் மொழி என்று மத்தவர்கள் தன்னை நினைக்க வேண்டும் என்று மாடு கூட சாணம் இட மறுக்கும் மேட்டங்க்காட்டில் இருந்தும் நகர வாழ்கை எனும் சந்து இடுக்கில் வசிக்கும் சில மாணவச் செல்வங்கள், நவ நாகரிகம் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு மேடத்தை மேம் என்றும், மாம் என்றும் அழைக்கும் விசித்திரத்தை கண்டும் கேட்டும் இருந்தன தமிழ் கூறும் இந் நல் உலகு, ஆனால் இதையும் நவ நாகரிகமாக மாற்றித்தான் தீருவேன் என்று நகரத்தில் உள்ள சில அங்காடிகளில் பணி புரியும் யுவதியும், யுவராசக்களும் ம்...மேம் என்று கூறி அழைகின்றர்கள், ஆங்கிலேயர்களுக்கு நல்ல காலம் போல் நம் நாட்டை விட்டு 1947 ம் ஆண்டே வெளிறியது இல்லை என்றால் இன்று சனல் கயறு திரிக்க கேரளாவில் தென்னை மரங்கள் இல்லாமல் போயிருக்கும் ஏன்னென்றால் அனைத்து ஆங்கிலேயர்களும் தூக்கில் தொங்கிட சனல் கயறு தீர்ந்து போயிருக்கும். இனி வரும் காலத்தில் குழந்தைகளுக்கு ஆடு எவ்வாறு கத்தும் என்று சொல்லி தர வேண்டாம் இந்த யுவதியும், யுவராசக்களும் பெண்ணினத்தை அழைக்கும் சொல்லான ம்...மேம் என்பதை அருகில் இருந்து காண்பித்தால் போதும்....
அகர முதல எனும் குறள் கூறிய வள்ளுவரின் இந்த குறளையும் சற்றே கேளுங்கள் "பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு"
Monday, November 15, 2010
காதலி தங்கையாக மாறியது....
கங்கா முதல் மகாராஜா மல்டிப்ளெக்ஸ் வரையும்
வ ஊ சி முதல் மருதமலை வரையும்
சென்று திரிந்து தின்று வந்த போது இல்லாத பாசம்
நான் அவளிடம் காதலிக்கிறேன் என்று கூறியபோது
உங்களை என் அண்ணன் போல நினைத்தேன்
என்று பாசம் பொங்க கூறிய போதுதான் தெரிந்தது
எனது பர்ஸ் காலி
வ ஊ சி முதல் மருதமலை வரையும்
சென்று திரிந்து தின்று வந்த போது இல்லாத பாசம்
நான் அவளிடம் காதலிக்கிறேன் என்று கூறியபோது
உங்களை என் அண்ணன் போல நினைத்தேன்
என்று பாசம் பொங்க கூறிய போதுதான் தெரிந்தது
எனது பர்ஸ் காலி
Tuesday, November 9, 2010
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்..
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம்நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில்
நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும்
உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல்
துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக
மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை
சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில்
யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு
ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
Top 10 Heroes CNN
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக
அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை
சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு
உள்ளார். ஒரு தமிழனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும்
வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும்
ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine
ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட
இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி (
நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட
இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட
வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு
கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம்
காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம்.
ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.
அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள்
தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை,
புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த
சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது
சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள்
விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப்
சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல்
நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு
போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை
உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு
வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற
மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 .
இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர்
பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு
தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்.
இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு
வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை
கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு
மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை
பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என்
கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும்
இந்த கணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி
தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற
பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள்
படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள்
தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி
கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள்.
இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.
"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி"
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும்
வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம்.இதை படித்தவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
Wednesday, September 8, 2010
காதல்... காமம்...
காதல்... காமம்...
யாருமற்ற சாலைகளில் நான் மட்டும் தனியே நடந்து செல்லும் போது
காதலும் காமமும் கலந்து என்னை கடக்கின்றது... குல்முகர் பூக்கள் என் மீது விழும்
தருணத்தில்... காதல். இளம் காதலர்கள் எனும் போர்வையில் இனக் கவர்ச்சி மேலோங்க இன்பத் தருணத்தில் இவ்வுலகை மறந்து யாருமற்ற சாலைகளில் என்னை கடக்கும் தருணத்தில் காமம்.
காதலும்... காமமும் அவரவர் என்ன ஓட்டத்தை பொருத்தா..?
Tuesday, April 27, 2010
Tuesday, April 20, 2010
Tuesday, March 23, 2010
Monday, March 22, 2010
பாரின் மாப்பிள்ளைகள் (நடிகைகளுக்கு மட்டுமா..?)
டீன் ஏஜ் வயது
Sunday, January 24, 2010
ஹெல்மட் - எமனின் நவீன பாச கயிறு
இடப்புறத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தை ஒட்டி வரும் ஒருவர் பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் ஒரு திருப்பத்தில் திரும்பும் போது இதனை சற்றும் எதிர்பாரத பின்னவர் முன்னவரின் மீது மோதி இருவரும் விழுந்து விடுகிறார்கள். இச் சம்பவத்தை நேரில் கண்ணுற்ற காவல் துறை நண்பர் உடனே ஓடி வந்தார். இதனிடையே அவ்விருவருக்கும் எவ்வித காயம் ஏற்படவில்லை. அப்போது காவல் துறை நண்பர் கூறினார் "ஹெல்மட் தலைக்கு இருவரும் அணிந்ததால் காயம் ஏற்படவில்லை" என்றார். அருகிலிருந்தவர் "ஹெல்மட் அணிந்ததால் தான் இவ் விபத்து நடந்தது என்றார். அதுவே உண்மை . ஏன் என்றால் நமது விழி ஓரத்தில் தெரியும் பிம்பம் நமக்கு பின்னால் உள்ள காட்சிகளை உணர முடியும். ஆனால்... ஹெல்மட் அணிவதால் நமது முகத்திற்கு முன்னால் உள்ள காட்சிகளை மட்டும் காணும் பொது பின்னால் உள்ள காட்சிகளை பார்க்க முடியாது. பின்னால் வருவபவைகளை காண்பதற்க்கு வசதியாக இரு சக்கர வாகனத்தின் இரு புறமும் கண்ணாடி பொருத்தி இருந்தால் அதனை பார்த்து விபத்து நேரா வண்ணம் பயணிக்கலாம். அரசாங்கம் அறிவித்த ஹெல்மட் சட்டம் சரியே ஆனால்... விபத்துகளுக்கு மூல காரணிகள் எவை எவை என்று ஆராய்ந்து பார்த்து சட்டமிடலாம்.இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் எப்படி ஹெல்மட் அணிய வேண்டுமோ அதே போல் இரு சக்கர வாகனத்தின் இரு புறமும் கண்ணாடி பொறுத்த வேண்டும் என்று சட்டமிடலாம். அப்போதுதான் விபத்தின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வரப்படும்.வள்ளுவன் கூற்று படி
"ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்ல தவர்க்கு"
அல்லது இனி வரும் நாட்களில்
எமனின் நவீன பாச கயிறாக ஹெல்மட் மாறிவிடும்.
Sunday, February 8, 2009
நவீன கைபர் கணவாயின் படம்
Subscribe to:
Posts (Atom)












